என்னைப் பற்றி

மருத்துவர்:ப.சதாசிவம்,(R.A.M.P),(B.E.M.S),M.D(ACU) ஸ்ரீ பொன்மலை வைத்தியசாலை, பு.புளியம்பட்டி ஈரோடு மாவட்டம். Cell:9994227755, 7373247373

Followers

சித்தர்கள்
***************
சித்தி நிலை பெற்றவர்கள் சித்தர்கள் எனப்படுவர். சித்து என்ற பொருளுக்கு அறிவு, மாயவித்தை, ஆன்மா, அருப்பம், ஞானம் யாருடைய ஆதரவும் இன்றி தோன்றி எல்லோரையும் உருவாக்குகின்ற சக்தி என்று பற்பல விளக்கங்களை முன்னோர்கள் தெரிந்துள்ளனர்.
வானவெளியில் பறத்தல் தன்னுடிய உடலைவிட்டு இன்னொரு உடலில் உயிரை செலுத்துதல் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் அணுவைப்போல் உடலைச் சுருங்கவைத்தல் மாபெரும் உருவமாக பெரிதாக ஆகுதல் இறகு போல் மிகவும் மேளிதகுதல் எண்ணிய இடத்திற்கு செல்லுதல், தன் இயற்கை நிலைக்கு மாறாகப் புதிய உருவம் கொள்ளுதல், நீரிலும் நெருப்பிலும் நடத்தல் முதலிய அதிசியத்தக்க செயல்களைச் செய்யும் ஆற்றலை பெற்றிருந்தவர்கள். பொய் என்னும் உடலை மெய்ப்பொருலகச் செய்தோர் சித்தர்கள். கற்றைப்பிடித்து மூலக்கனலை மணி மந்திர ஒளஸதம் என்னும் துணையால் மாளாத அமுதுண்டு நரை, திரை, பிணி, மூப்பின்ரி இவ்வுலகில் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர்கள்.
உலகில் மனிதன் இறவாமல் நீண்டகாலம் வாழமுடியும் என்ற கருத்தைக்கூறி வாழ்ந்து காட்டியவர்கள். உலகிலேயே மனிதன் நீண்ட நாள் வாழ வழிவகை செய்யும் மருத்துவம் சித்த மருத்துவம் தான். அதனால் அவர்கள் சாகாநிலையை பெற்றவர்கள். இன்னரும் பலருக்கு ஆவி வடிவாக வந்து காட்சி தருவதாக மக்கள் கூறுகின்றனர். உடம்பை அழிந்து போகாமல் பாதுகாக்கும் சரப்பயிற்சி என்னும் யோகமுறை, தியானமுறை , வர்மமுறை, இயற்கை மருத்துவம் போன்ற அனைத்திற்கும் பிறப்பிடமாக அமைந்துள்ளது. உடலுக்கு எந்த பிணியும் வராமல் தடுக்கவும் வந்த பிணியை எளிதில் போக்கியும் வாழ்ந்தார்கள். பற்பல மூளிகையான காயகல்ப்ப அமிர்தங்களை தயாரித்து உலகுக்கு நல்கினர்.
பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்
***************************************
பெயர் - நந்தி தேவர் குரு - சிவன்சீடர்கள் - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி சமாதி - காசி (பனாரஸ்)
பெயர் - அகஸ்தியர் குரு - சிவன்சீடர்கள் - போகர், மச்சமுனி சமாதி - அனந்தசயனம் (திருவனந்தபுரம்)
பெயர் - திருமூலர் உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு குரு - நந்தி சமாதி - சிதம்பரம்
பெயர் - போகர் உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17 குரு - அகஸ்தியர், காளங்கி நாதர் சீடர்கள் - கொங்கனவர், கருவூரார், இடைக்காடர் சமாதி - பழனி
பெயர் - கொங்கனவர் உத்தேச காலம் - கி.பி. 14ம் நூற்றாண்டு குரு - போகர் சமாதி - திருப்பதி
பெயர் - மச்சமுனி -குரு அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர் சீடர்கள் - கோரக்கர் சமாதி - திருப்பரங்குன்றம்
பெயர் - கோரக்கர்-குரு தத்தாத்ரேயர், மச்சமுனி சீடர்கள் - நாகார்ஜுனர்சமாதி - போயூர் (கிர்னார், குஜராத்)
பெயர் - சட்டமுனி காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் குரு - நந்தி, தக்ஷிணாமூர்த்திசீடர்கள் - சுந்தரானந்தர் சமாதி - ஸ்ரீரங்கம்
பெயர் - சுந்தரானந்தர் குரு - சட்டமுனி, கொங்கனவர் சமாதி - கூடல் (மதுரை)
பெயர் - ராம தேவர் (Yakub / Jacob)உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்குரு - புலஸ்தியர், கருவூரார் சமாதி - அழகர் மலை
பெயர் - குதம்பைசித்தர் உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் குரு - இடைக்காடர், அழுக்காணி சித்தர் சமாதி - மாயவரம்
பெயர் - கருவூரார் குரு - போகர் சீடர்கள் - இடைக்காடர் சமாதி - கருவை (கரூர்)
பெயர் - இடைக்காடர் குரு - போகர், கருவூரார் சீடர்கள் - குதம்பை, அழுக்காணி சித்தர் சமாதி -
பெயர் - கமலமுனி சமாதி - திருவாரூர்
பெயர் - பதஞ்சலி குரு - நந்திசமாதி - ராமேஸ்வரம்
பெயர் - தன்வந்தரி சமாதி - வைத்தீஸ்வரன் கோவில்
பெயர் - பாம்பாட்டி குரு - சட்டமுனி சமாதி - சங்கரன் கோவில்
பெயர் - வால்மீகி குரு - நாரதர் சமாதி - எட்டிக்குடி

0 comments

Post a Comment


Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates