என்னைப் பற்றி

மருத்துவர்:ப.சதாசிவம்,(R.A.M.P),(B.E.M.S),M.D(ACU) ஸ்ரீ பொன்மலை வைத்தியசாலை, பு.புளியம்பட்டி ஈரோடு மாவட்டம். Cell:9994227755, 7373247373

Followers

நமது உடலமைப்பு
***************************************************
அண்டத்தில் (உலகத்தில்)உள்ளது பிண்டத்திலும் (நமது உடல்) உள்ளது என்பது சித்தர்களின் கொள்கை. உலகம் உருவானது பஞ்சபுதங்களின் சேர்க்கையாகும். அதேபோல் நமது உடல் பஞ்ச புதங்கலாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவான உடல் சப்த தாதுக்கள் எனப்படும் தாதுக்களால் இயங்கிவருகிறது.
ஐம்பூதங்களும் உடலமைப்பும்
**************************************************
1. நிலம்: எலும்பு, தோல், மாமிசம், முடிகள், நாடி நரம்புகள் முதலியவற்றை கொண்டுள்ளது.
2. நீர்: இரத்தம், கொழுப்பு, விந்து, சுரோணிதம், சிறுநீர், மூளை முதலிய தேகக்கூறினை கொண்டுள்ளது.
3. தீ: அகங்காரம், சோம்பல், புணர்ச்சி,பயம், நித்திரை முதலிய செயல்களை செய்யும் தேகக்கூறினை கொண்டுள்ளது.
4. காற்று: ஓடுதல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய செயல்களை செய்யும் தேகக்கூறினை கொண்டுள்ளது.
5. ஆகாயம்: காமம், குரோதம், மோகம், மதம், லோபம் முதலிய செயல்களை செய்யும் தேகக்கூறினை கொண்டுள்ளது.
சப்த தாதுக்கள்
************************
1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந்நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களை எடுத்துச் சென்று வழங்கி அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும் உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4. கொழுப்பு: ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைத்தல் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருதோற்ரத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.

0 comments

Post a Comment


Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates