மானிட பிறப்புகள் அனைவரும் நோயிலிருந்து விடுபட தமிழ் மருத்துவ முறையாம் சித்த மருத்துவத்தை முதன் முதலில் சிவபெருமான் பர்வதிதேவிக்கு உபதேசித்தார். பார்வதிதேவி அசுவநிதேவர்களுக்கு உபதேசம் செய்தார். அசுவநிதேவர்கள் அகஸ்தியருக்கு அருளினர். அகஸ்தியர் ஏனைய சித்தர்களுக்கு அனுக்கிரகம் செய்தார். அவர்கள் வழிவந்த நவகோடி சித்தர்களுக்கும் இந்த மருத்துவ முறை பரவி மானிட வர்க்கம் நோயிலிருந்து விடுப்படும்பொருட்டு அநேக கிரந்தங்கள் செய்துவைத்தனர். அவ்வகை கிரந்தங்களிலிருந்து வைத்தியமுறைகள் பாரம்பரிய முறையாக தமிழகத்தில் வளர்ந்துவந்துள்ளது. இத்தகைய ஆதிகால மருத்துவ விஞ்ஞானிகலகிய அகஸ்த்தியர், திருமூலர், போகர் போன்ற சித்தர்களின் அனுபவமுரைகளை பல்லாண்டு ஆராய்ந்து அறிந்து தீராத மகா கொடிய நோய்களுக்கெல்லாம் மருந்துகள் உள்ளதென அறியப்பட்டுள்ளது
0 comments