விரைவில் சித்த மருத்துவத்தில் மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 நோய்களைப் பற்றியும் சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகளைப் பற்றியும் நோய்களுக்குண்டன மருந்துகளைப்பற்றியும் விரிவாக எழுத உள்ளேன் .பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உடற்கூறு தத்துவங்கள் 96
**********************************************
1. பூதம் -------------- ------------------- 5
2. புலன்கள்----------- ------------------ 5
3. பொறிகள் ---------- --------------- 5
4. கன்மேந்திரியங்கள் -----------5
5. ஞானேந்திரியங்கள்--- --------- 5
6. கரணம் ----------- ---------------- 4
7. அறிவு ---------------------------- 1
8. நாடிகள் ------------------------ 10
9. வாயுக்கள் --------------------- 10
10. ஆசயங்கள்-- -------------------- 5
11. கோசங்கள்---- ------------------ 5
12. ஆதாரம் ------- ----------------- 6
13. தோசம் --------- -----------------3
14. மலம் ------------- ----------------3
15. மண்டலம் -------- ---------------3
16. ஈடனை ----------- ---------------3
17. குணம் --------------- ------------ 3
18. வினை -------------- ------------ 2
19. விகாரம் ------------ ------------ 8
20. அவஸ்தை ---------- -----------5
---------------------
மொத்தம் 96
---------------------- 1) ஐம்புதங்கள்
************************
1.நிலம் 2. நீர் 3.தீ 4.காற்று 5.ஆகாயம்
--------------------------------------------------------------------------------------------------
2) பொறிகள் 5
*******************************
1.மெய் 2.வாய் 3.கண் 4.மூக்கு 5.செவி
----------------------------------------------------------------------------------------------------
3)புலன்கள் 5
*****************************
1. பார்த்தல் 2. கேட்டல் 3. சுவைத்தல் 4.நுகர்தல் 5. உணர்தல்
-------------------------------------------------------------------------------------------------------
4) கன்மேந்திரியங்கள் 5
****************************************
1.வசனம்: இது ஆகாயத்தினிடமிருந்து வசனிக்கும்.
2. தானம்: இது வாயுவினிடமிருந்து இடுதல், ஏற்றல் செய்யும்.
3. கமனம்: இது தேயுவினிடமிருந்து நின்று நடப்பிக்கும்.
4. விசர்கம்:இது அப்புவினிடமிருந்து நின்று மலசலங்களை கழிக்கும்.
5. ஆனந்தம்:இது பிருதிவியினிடமிருந்து நின்று மர்மஸ்தானங்கலில் ஆனந்தத்தை விளைவிக்கும்
----------------------------------------------------------------------------------------------------------
5) ஞானேந்திரியங்கள் 5
*************************************
1. சப்தம்: இதை ஆகாயத்தினிடமிருந்தறிவது.
2. ஸ்பரிசம்: இதை வாயுவினிடமிருந்து அறிவது.
3. ரூபம்: இதை தேயுவினிடமிருந்து அறிவது.
4. ரசம்: யதை அப்புவினிடமிருந்து அறிவது.
5.கந்தம்: இதை பிருதிவியினிடமிருந்து அறிவது.
-------------------------------------------------------------------------------------------------
6) கரணம் 4
**************************
1. மனம்: இது வாயுவின் கூறாக அலைந்து விசையங்களை நினைக்கும்.
2. புத்தி: இது தேயுவின் கூறாக ரூப பேதங்களை தெரிவிக்கும்.
3. அகங்காரம்: இது பிருதிவியின் கூறாக விசையங்களை கொண்டெலுப்பும்.
4. சித்தம்: இது அப்புவின் கூறாக விசையங்களை பற்றசெய்யும்.
------------------------------------------------------------------------------------------------
7) அறிவு 1
************************
உள்ளம்: இது ஆகாயத்தின் அம்சமகையல் உச்சியில் நின்று சகல விசயங்களையும் நோக்கும். பகுத்தறிவிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------
8)நாடிகள் 10
***********************
1. இடகலை: இந்த வத நாடியானது வலது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் மார்க்கமாய் இதயத்திற்கு சென்று, இடப்புறமாய் கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள சந்திர மண்டலத்தை அடைந்து இடது நாசியின் வழியாக சென்று இடக்கரத்தில் பாயும்.
2. பிங்கலை: இந்த பித்த நாடியானது இடது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் வழியாய் இதயத்தின் வலப்புறமாக கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள அக்கினி மண்டலத்தை அடைந்து வலது நாசியின் வழியாக சென்று வலக்கரத்தில் பாயும்.
3. சுழிமுனை: இந்த கப நதியானது இவ்விரண்டிற்கும் இடையே மூலாதாரத்தில் நின்று உச்சிவரை ஓடி சூரிய மண்டலத்தை அடைந்து வலது, இடது நாசித்துவாரங்களுக்கு இடையே இயங்கி நாடு நாடியாய் தையில் முட்டி நிற்பது.
4. சிங்குவை: உள் நாக்கில் நின்று உணவு, நீர் ஆகியவற்றை விழுங்கச் செய்யும்.
5. புருடன்: மூலாதாரத்தில் தொடக்கி வலது கண்ணில் நின்று பார்வையைதரும்.
6.காந்தாரி: மூலாதாரத்தில் தொடக்கி இடது கண்ணில் நின்று பார்வையைதரும்.
7.அத்தி: மூலாதாரத்தில் தொடக்கி வலது காதில் நிற்கும்.
8. அலம்புடை: மூலாதாரத்தில் தொடக்கி இடது காதில் நிற்கும்.
9. சங்கினி: குறியில் நின்று கொடிபோல் சுற்றிக்கொண்டிருக்கும்.
10. குருநாடி: மூலாதாரத்தில் தொடக்கி அபானத்தில் நிற்கும். --------------------------------------------------------------------------------------------------
9) வாயுக்கள் 10
*************************
2) அபானவாயு: உடலின் நடுவான ப்க்குவாசயத்தை இருப்பிடமகக்கொண்டு வயிறு முற்றிலும் வாழ்ந்து உண்ட உணவு, நீர்ப்பொருள்களை செரிப்பதற்குரிய அக்கினியை விருத்தி செய்து சரத்தையும், திப்பியையும் வெவ்வேறாக பிரித்து இடுப்பு, தொடை, பிறப்புறுப்புகள், அடிவயறு முதலிய உறுப்புகளை இயங்கச்செய்கிறது. கீழ் நோக்கிச்சென்று மலம், சிறுநீர், விந்து, சூதகம், சிசு முதலியவற்றை வெளிக்கொணரும். இதற்கு கடவுள்: வரதராஜன். வாதத்திற்கு ஆதாரம் . நெருப்பின் கூறு.3) வியான வாயு: இது தோளிலிருந்து 72000 நாடி நரம்புகளிலும் சென்று உடல் உறுப்புகளை நீட்டல், மடக்கல், நடத்தல், தோலில் நின்று உணர்சியரிதல், கண்சிமிட்டல், விழித்தல், முதலிய தொழில்களை செய்யும். உணவின் சாரத்தை இரத்தத்தில் பரப்பி உடலைக்காக்கும். கடவுள்: யமன். இருப்பிடம்: இருதயம். ஆகயத்தி கூறு.
4) உதான வாயு: இது வயிற்றிலுள்ள சடராக்னியிலிருந்து தோன்றி உணவின் சாரத்தில் சேர்ந்து அதை ஆங்காங்கே நிறுத்தும். மார்புக்கு மேல் மூக்கு வரை மேல்நோக்கிச் சென்று கழுத்து, தொப்புழ், மூக்கு, மூதளியவ்றில் தங்கி பேச்சு, நினைவு உறுப்புகளை இயங்கசெய்கிறது. மனதிடம், உடல்திரம் முதலியவற்றை உண்டாக்குகிறது. நிறம்: மின்னல், கடவுள்: அக்கினிதேவன் மண்ணின் கூறு.
5) சமான வாயு: தொப்புழிலிருந்து கால் வரையிலும் சீரகப்பரவி பிரவாயுக்களை சமனப்படுத்தி நீர், உணவு முதலியவற்றை உடலில் சேர்க்கும். பசயுண்டக்கும். வயிறு, ஈரல் முதலிய உறுப்புகளில் அலைந்து திரியும். நிறம்: புட்பராகம். கடவுள்:சூரியன். கபத்திற்கு ஆதாரம்.
6) நாகன்: கலைகள் அனைத்தையும் கற்குமாறு அறிவை எழுப்பும். பண்களை பாடுவிக்கும். கண்ணிமைத்தல், மயிர் சிலிர்த்தல் முதலிய செயல்களை செய்விக்கும். பொன்னிறம். கடவுள்; அனந்தன்.
7) கூர்மன்: மனதில் தோன்றி கண்ணிலிருந்து இரு விழிகளைப் பார்க்கவும் இமைகளை மூடவும் செய்கிறது. கொட்டாவி விடல், வைமூடல், கண்நீர்விடல் முதலிய செயல்களைச் செய்யும். வெண்மை நிறம். கடவுள்: திருமால்.
8) கிரிகரன்: நாக்கு, மூக்கு இவற்றில் கழிவையுண்டக்கும். இருமல், தும்மல் வரச்செய்யும். நிறம்: கருமை. கடவுள்: சிவன்.
9)தேவதத்தன்: வட்டவடிவமாய்த் தோன்றி சோம்பளையுண்டக்கும். உடல் முரித்தலைச் செய்யும். தூங்கி எழுந்ததும் களைப்பை உண்டாக்கும். கண்ணை பல இடங்களிலும் உலவச் செய்யும். சண்டையிடல், வதடுதல் செய்யும். நிறம்; படிகம். கடவுள்: தேவேந்திரன்.
10) தனஞ்செய்யன்: வார்த்தைகளை நாவிலிருந்து எழுப்புதல் மூக்கை தடித்து வீங்கச்செய்தல், காதில் கடல்போல் இரைச்சலை உண்டாக்குதல் செய்யும். உடலில் இருந்து உயிர் நீங்கியபின் அனைத்து வாயுக்களையும் வெளிப்படுத்தி மூன்றாம் நாள் தலை வெடித்து பின் வெளியேறும். கடவுள்: தன்வந்திரி நிறம்: நீலம்.
2.சுவாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு 2 விரல்கடை மேலுள்ளது. நாற்கொனமும் அதன் நடுவே 6 இதழ்களுடைய புஷ்பமும் நடுவில் லிங்க பீடமும் நகார எழுத்தும் நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரமன் தேவி சரஸ்வதி தோன்றுவர்.
3. மணிபூரகம்: சுவாதிஷ்டானத்திற்கு 8 விரற்கடை மேல் கோழிமுட்டை வடிவில் 1008 நரம்புகள் சூழ இருக்கும். பிறை வடிவம் அதன் நடுவே 10 இதழ்களுடைய புஷ்பமும், அதன் நடுவே மகார எழுத்தும் அதன் நடுவில் மகாவிஷ்ணு தேவி மகாலட்சுமி அமர்ந்திருப்பர்.
4. அனாகதம்: மணிபூரகத்திற்கு 10 விரற்கடை மேல் முக்கோண வடிவில் 12 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே சிகார எழுத்தும் அதன் நடுவில் ருத்திரனும் தேவி ருத்திரியும் அமர்ந்திருப்பார்.
5.விசுத்தி: அனாகதத்திற்கு 10 விரற்கடை மேல் கண்டஸ்தானத்தில் அறு கோணமாக இருக்கும். அதன் நடுவே 16 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே வகார எழுத்தும் அதன் நடுவில் மகேஷ்வரரும் தேவி ம்கேஷ்வரியும் இருப்பர்.
6. ஆக்கினை: விசுத்திக்கு 12 விரற்கடை மேல் இருக்கும். 3 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே யகார எழுத்தும் அதன் நடுவில் சதாசிவனும் தேவி மனோன்மணியும் இருப்பர்.
13) தோஷம் 3
14) மலம் 3
15) மண்டலம்: 3
16) ஈடணைகள் 3
17) குணம் 3
18)வினை 2
19) விகாரம் 8
20) அவஸ்தை 5
அண்டத்தில் (உலகத்தில்)உள்ளது பிண்டத்திலும் (நமது உடல்) உள்ளது என்பது சித்தர்களின் கொள்கை. உலகம் உருவானது பஞ்சபுதங்களின் சேர்க்கையாகும். அதேபோல் நமது உடல் பஞ்ச புதங்கலாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவான உடல் சப்த தாதுக்கள் எனப்படும் தாதுக்களால் இயங்கிவருகிறது.